நெல்லை: போக்சோ வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

போக்சோ வழக்கில் குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2021-08-10 15:11 GMT

போக்சோ வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

நெல்லை மாவட்டம் ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் குற்றவாளி நெல்லை வட்டம் சீவலப்பேரி மேட்டுக்குப்பகுறிச்சி பகுதியைச் சேர்ந்த ராமையா என்பவரின் மகன் சுரேஷ்(36) என்பவர் போக்சோ வழக்கில் குற்றவாளி ஆவார்.

இவர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நெல்லை ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரசிதாக்கு அறிவுறுத்தினார்.

அதன்பேரில் குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் 10.08.2021 அன்று குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News