நெல்லை ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே மூலைக்கரைப்பட்டி அருகே ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கூந்தன் குளத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் மகன் முகேஷ் (23) ஆட்டோ டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் கடந்த மாதம் 25ம் தேதி திடீரென மாயமாகியுள்ளனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மூலைக்கரைபட்டி போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், இருவரும் சென்னையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னையில் பதுங்கி இருந்த இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரைணயில், மாணவி சிறுமி என்பதால் ஆட்டோ டிரைவர் முகேஷ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.