மூலக்கரைப்பட்டி கோவில் கும்பாபிஷேகம்: எம்எல்ஏ கலந்து கொண்டு வழிபட்டார்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மூலக்கரைப்பட்டி அருகே உள்ள எடுப்பூர் பெருமாள்சாமி,முப்பிடாதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

Update: 2021-03-14 14:28 GMT

நெல்லை மாவட்டம், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மூலக்கரைப்பட்டி அருகே உள்ள எடுப்பூர் பெருமாள்சாமி, முப்பிடாதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக பூஜை தொடங்கியது.

தீர்த்தம் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடைப்பெற்றது. முதல் கால யாகவேள்வி, இரண்டாம் கால யாகவேள்வி பூஜைகளை தொடர்ந்து இன்று காலை கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இவ்விழாவில் நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் எம்எல்ஏ கலந்துகொண்டு, பக்தர்களுக்கு பிரசாத பைகளை வழங்கினார். இதில் நாங்குநேரி வடக்கு ஒன்றிய தகவல்நுட்ப பிரிவு இணை தலைவர் தெய்வநாயகபேரி ராமகிருஷ்ணன், Ex ரெட்டியார்பட்டி ஊராட்சி கழக செயலாளர்,வி.எஸ் மணிப்பிள்ளை, பானங்குளம் ஊராட்சி கழக செயலாளர் கணேசன்,எடுப்பூர் காளிமுத்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News