களக்காடு வனப்பகுதியில் காட்டு விலங்குகளை வேட்டை: ஒருவர் கைது
களக்காடு வனப்பகுதியில் காட்டு விலங்குகளை வேட்டியாடிய ஒருவர் கைது; 5 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் நான்குநேரி பகுதியைச் சேர்ந்த 6 பேர் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதாக களக்காடு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வனத்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
அப்போது காட்டுப்பகுதியில் காட்டு விலங்குகளை வேட்டையாடிக்கொண்டிருந்த 6 பேர் கொண்ட கும்பல் வனத்துறையினரை பார்த்தவுடன் தப்பி ஓடியுள்ளனர். இதில் ஒருவர் பிடிபட்டார். அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் நான்குநேரி செல்வந்தர் தெருவைச் சேர்ந்த் மகாராஜன் என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்த 2 வயது மதிக்கத்தக்க மரநாயை வனத்துறையினர் கைப்பற்றினர்.
மேலும் காட்டு விலங்குகளை வேட்டையாடி இருக்கிறார்களா என்பது குறித்த விசாரணையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் தப்பி ஓடிய 5 பேரையும் வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.