வேளாண் கல்லூரி சார்பில் விவசாயிகள் அதிக மகசூல் பெற செயல் விளக்கம்

சேரன்மகாதேவி வட்டார விவசாயிகளுக்கு விவசாயத்தில் அதிக மகசூல் பெற வேளாண் கல்லூரி சார்பில் செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

Update: 2022-03-19 07:15 GMT

சேரன்மகாதேவி வட்டாரத்தில் விவசாயிகளுக்காக தங்கப் பழம் வேளாண்மைக் கல்லூரி சார்பாக அதிக மகசூல் பெற செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. 

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி வட்டாரத்தில்,   சு.தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள்,  ஊரக வேளாண் அனுபவ முகாமின்கீழ்,   விவசாயிகளுக்காக களான் வளர்ப்பு, வாழையில் மதிப்புக் கூட்டல் பொருட்கள், மாவில் பூச்சி மேலாண்மை, வேம்பு பொருட்களைக் கொண்டு பூச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாடு, கோடை காலத்தில் தண்ணீர் சேமித்து அதிக மகசூல் பெரும் தொழில் நுட்பங்கள் பற்றிய செயல்விளக்கம் நடத்தினர்.

இதில் தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் அபிஜித்நாயர், அஜித்குமார், ஆனந்த்பாபு, அரவிந்த், இளங்கோவன், ஹரிசெல்வபிரசாத், முகமதுஅஸ்லாம், பிரசாந்த், ராஜேஷ், சிவஜெயஆகாஷ், விஸ்வநாத் ஆகியோர் கலந்து கொண்டனர் . இதில் பதினைந்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.  அவர்களுக்கு  செயல் விளக்கங்கள் பற்றிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News