கொடை விழாவில் தகராறு: தட்டிக்கேட்ட வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

கோவில் கொடை விழாவில் அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.;

Update: 2021-08-13 05:21 GMT

கோவில் கொடை விழாவில் தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டர்புத்தில் 10-ம் தேதி அன்று கோவில் கொடை விழா நடைபெற்றது. அப்போது பட்டர்புரத்தை சேர்ந்த சுரேஷ்(21), மனோஜ்குமார்(22), மற்றும் சக்திவேல்(21), ஆகியோர் சிறுவர்களிடம் தகராறில் ஈடுபட்டதை பட்டர்புரத்தை சேர்ந்த சுடலை கண்ணு என்ற சுரேஷ்(21) கண்டித்துள்ளார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து ஆயுதங்களுடன் வந்த மூன்று பேரும் சுடலைகண்ணுவை அவதூறாகப் பேசி அரிவாளால் தாக்கி காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சுடலைக்கண்ணு நாங்குநேரி காவல் நிலையத்தில் 11-ம் தேதி அன்று அளித்த புகாரின் அடிப்படையில் நாங்குநேரி காவல் ஆய்வாளர் காளியப்பன் விசாரணை செய்து சுடலைக்கண்ணுவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளிகள் மூன்று போரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Tags:    

Similar News