நெல்லை-வீடு வீடாக சென்று கொரோனா விழிப்புணர்வு- கபசுர குடிநீரும் வழங்கப்பட்டது

நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டியில் வீடு வீடாக சென்று கொரோனா விழிப்புணர்வு மற்றும் கபசுர குடிநீர் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்றது.

Update: 2021-05-28 06:07 GMT

நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டியில் வீடு வீடாக சென்று கொரோனா விழிப்புணர்வு மற்றும் கபசுர குடிநீர்  தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்  சார்பில் நடைபெற்றது.

கொரோனா பெரும் தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பாகவும், விழிப்புணர்வோடும் இருந்து கொரோனா வராமல் தற்காத்து கொள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் யாபேஸ் பாண்டியன் தலைமையில் அனைவரும் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து சிவந்திப்பட்டி கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று கொரோனா குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அரசு வழங்கியுள்ள கட்டுப்பாடுகளை கடைபிடித்து, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு எடுத்துரைத்தனர்.அதன் தொடர்ச்சியாக அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆட்டோ தொழிற் சங்கம் ராஜசெல்வம் கட்டிட தொழிலாளர் சங்கம் யோசுவா ,அற்புதராஜ் ,ராபர்ட்,மார்ட்டின், ராபின்,எமில் ,கிஷோர், ராஜசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News