நாங்குநேரியில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

நாங்குநேரியில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Update: 2021-10-21 12:31 GMT

நெல்லை  மாவட்டம் நாங்குநேரியில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி புதிய பஸ் நிலையத்தில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இது தொடர்பாக நடந்த கலைநிகழ்ச்சிக்கு நாங்குநேரி தாசில்தார் இசக்கிபாண்டி தலைமை வகித்தார்.

இதில் கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், போன்ற பல வகையான கலை நிகழ்ச்சிகளின் மூலம் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் கெடுதல் குறித்து விழிப்புணர்வை கிராம புற கலைஞர்கள் நடத்தி காட்டினர். இந்த  நிகழ்ச்சியை பஸ் நிலையத்தில்  இருந்த, கடந்து சென்ற பயணிகள், பொதுமக்கள் கண்டு களித்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் கள்ளச்சாராயத்தின் தீமைகள் பற்றியும், கள்ளச்சாராயம் குடித்தால் ஏற்படும் உயிரிழப்பு பற்றியும் குழுவினர்கள் விளக்க உரை ஆற்றினர். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.


Tags:    

Similar News