நெல்லை அரசு பள்ளி மாணவர்களுக்கு காணொலி காட்சி மூலம் கொரோனா விழிப்புணர்வு

கொரோனா தொற்றிலிருந்து மாணவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள காணொளி காட்சி முலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-09-03 11:00 GMT

காணொலிக்காட்சி கொரோனா விழிப்புணர்வில் கலந்துகொண்ட மாணவிகள்.

நெல்லையை அடுத்த ரஹ்மத் நகரில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, சதக்கத் கிராம மேம்பாட்டு திட்டம் (SOP) மற்றும் உன்னத் பாரத் அபியான் (UBA) திட்டத்தின் சார்பாக பர்கிட் மாநகரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் உள்ள உயர்தொழில் நுட்ப கணிணி ஆய்வகத்தில் மாணவர்கள் தங்களை கொரோனா பெருந்தொற்று நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளும் விதமாக காணொளி காட்சி வாயிலாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை ஜோதிமணி தலைமை வகித்தார்.

கன்னியாகுமரியில் உள்ள சாரதா கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவர் பிரதீப் குமார் சிறப்புரை ஆற்றினார். UBA ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் ஷேக் முஹைதீன் பாதுஷா, SOP. ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர். முனைவர் முகம்மது ரில்வான் மற்றும் SOP மேலாளர் முகம்மது ராசிக் ஆகியோர் இந்நிகழ்ச்சியை ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

Tags:    

Similar News