நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டோர் பங்கேற்பு.;
நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஆர்.யூ.சி. மகாலில் காங்கிரஸ் கட்சி சார்பில், உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் கட்சியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் வாழ்த்தி பேசினார். பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வின் மனைவி ரூபியின் பிறந்த நாள் விழாவையொட்டி கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர்.
விழாவில் மாநில மகளிர் அணி பொதுச்செயலாளர் குளோரிந்தாள். கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் அமுதா கார்த்திகேயன், மாவட்ட கவுன்சிலர் தனி தங்கம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.