நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்
நாங்குநேரி தொகுதி சட்டமன்ற அதிமுக வேட்பாளர் தச்சை கணேசராஜா தீவிர தேர்தல் பிரச்சாரம்;
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தச்சை கணேஷ்ராஜா தனது பிரசாரத்தில், நாங்குநேரி தொகுதியின் இதயப்பகுதியான நாங்குநேரி வடக்கு ஒன்றியம் சிந்தாமணி, முனைஞ்சிபட்டி, கூந்தன்குளம், காடன்குளம்ப, பருத்திபாடு, மருதகுளம், காரந்தநேரி, ஆழ்வநேரி பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட தொடர்ந்து உழைத்து வருவேன். இப்பகுதி மக்களின் நலனில் இன்னும் சிறப்பாக,வளர்ச்சி பணிகள் செய்து தரப்படும் என கூறினார். அதிமுக அரசு தொடர்ந்து செயல்பட அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களிக்க கேட்டுக்கொண்டார்.
பிரசாரத்தில் கழக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்