நெல்லை மாவட்டம் களக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட யாசராசபுரம் பகுதியைச் சேர்ந்த பாதுஷா (48), என்பவர் களக்காடு பகுதியில் தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் 21.04.2021 அன்று பணி முடித்து வீட்டிற்கு செல்லும்போது, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் மருத்துவமனை உரிமையாளரின் வீட்டின் காம்பவுண்டு சுவரை இடிக்கும் சத்தம் கேட்டதும் நண்பர்களுடன் சென்று பார்த்துள்ளார். எதற்காக காம்பவுண்ட் சுவரை இடுக்கிறீர்கள் என்று கேட்டபோது வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் மற்றும் கொத்தனார் பிரபு(40) சம்பளம் கொடுத்து இடிக்கச் சொன்னதாகவும் கூறினர்.
பின் பாதுஷா சுவரை இடிக்க கூடாது என்று சத்தம் போட்டதும் சுவரை இடித்து கொண்டிருந்த டோனாவூர் பகுதியைச் சேர்ந்த குமார்(37),மைக்கேல் சுமன்(28) மற்றும் களக்காடு கோவில் பத்தைச் சேர்ந்த முத்துசாமி(29) ஆகிய மூவரும் பாதுஷாவை அவதூறாக பேசி கையிலிருந்த கம்பியால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து பாதுஷா களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் களக்காடு உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் விசாரணை மேற்கொண்டு, சுவரை இடித்து, கொலை மிரட்டல் விடுத்த மூன்று நபர்களையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.