அரசு மருத்துவமனையில் அப்பாவு ஆய்வு.
மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோரிடம் விவாதித்தனர்.;
நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சட்டபேரவை தலைவர் அப்பாவு மற்றும் நெல்லை எம்.பி.ஞானதிரவியம் ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தினர்.
நெல்லை மாவட்டம்நாங்குநேரி அரசு மருத்துவமனையில் கொரானா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வை தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு மற்றும் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் ஆகியோர் மேற்கொண்டனர்.
நெல்லை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட இருக்கும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோரிடம் விவாதித்து மேற்கொண்டு செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு மற்றும் நெல்லை எம்.பி ஞானதிரவியம் ஆகிய இருவரும் கேட்டறிந்தனர்