டவ்தே புயல் - குத்தரபாஞ்சான் அருவிகளில் வெள்ளபெருக்கு.
டவ்தே - அருவில தண்ணி கொட்டுதே.
டவ்தே புயல் காரணமாக நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியில் கனமழை பெய்து வருவதால் பணகுடி குத்தரபாஞ்சான் அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
டவ்தே புயல் காரணமாக நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
களக்காடு மலையில் தொடரும் மழையால் தலையணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் தலையணைக்கு வந்து செல்வதுண்டு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.
தற்போது கொரானா காரணமாக தலையணை மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை பெய்து வருவதால் அருவி மற்றும் நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தலையணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தடுப்பணையை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் களக்காட்டில் ஓடும் உப்பாறு, நாங்குநேரியான் கால்வாய், பச்சையாறுகளிலும் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
அதே போன்று பணகுடி குத்தரபாஞ்சான் அருவியிலும் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது இந்த தண்ணீர் குளங்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.