அதிமுக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம் துவக்கம்

Update: 2021-03-17 05:30 GMT

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக வேட்பாளர் கணேசராஜா துவங்கினார்.

நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் வேட்பாளராக உள்ள தச்சை கணேசராஜா இன்று காலை சீவலப்பேரி ஊரில் உள்ள பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பின்னர் பிரச்சாரத்தை ஆரம்பித்து வாக்குகள் சேகரித்தார். முன்னதாக அப்பகுதி மக்கள் தச்சை கணேசராஜாவுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News