திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் அதிமுக செயல்வீரர்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வருகிற 2021 சட்டமன்ற தேர்தல் பணி குறித்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது.இதில் திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலாளரும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான தச்சை என் கணேசராஜா தலைமை தாங்கினார். இதில் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் அஇஅதிமுக மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள் பகுதி, ஒன்றிய, கிளை, நகர, கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.