நெல்லை: கடன் பிரச்சினை காரணமாக ரயில் முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை.
வெங்கடேஷ் சென்னையில் டிராவல்ஸ் நடத்தி வந்த நிலையில், கடன் பிரச்னை காரணமாக சொந்த ஊருக்கு வந்த அவர், சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில் இந்த விபரீத முடிவைத் தேடிக்கொண்டார்;
அம்பாசமுத்திரத்தில் கடன் பிரச்னை காரணமாக ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மகன் வெங்கடேஷ் (33). இவருக்கு திருமணமாகி கலைச்செல்வி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.
வெங்கடேஷ் சென்னையில் டிராவல்ஸ் நடத்தி வந்த நிலையில், கடன் பிரச்னை காரணமாக சொந்த ஊருக்கு வந்து விட்டார் . அவர் சில நாட்களாகவே கடன் பிரச்னை காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று காலையில் தென்காசிலிருந்து, திருநெல்வேலி செல்லும் ரயிலில், புளியங்குளம் ரயில்வேகேட் அருகில் யாரும் எதிர்பாராத நேரத்தில், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.