உலக சித்தர்கள் தினம்: ஸ்ரீ அகத்தியர் மகா ஆயில்ய உற்சவ விழா

தாமிரபரணி நதிக்கரையில் அருள்மிகு ஸ்ரீஅகத்தியர் திருக்கோவிலில் உலக சித்தர்கள் தின மகா ஆயில்ய உற்சவ விழா நடைபெற்றது.

Update: 2021-12-23 11:15 GMT

ஸ்ரீ அகத்தியர் திருக்கோவிலில் நடைபேற்ற உலக சித்தர்கள் தின மகா ஆயில்ய உற்சவ விழா.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகா அத்தாளநல்லூர் கிராமத்தில் தாமிரபரணி நதிக்கரையில் அருள்மிகு ஸ்ரீஅகத்தியர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலானது கணக்கிட முடியா வருடங்களுக்கு முற்பட்டதும், பிரளய வெள்ளங்களைத் தாண்டியும், மாமுனிவர் ஸ்ரீஅகத்தியரின் ஆலயப்படித்துறை இந்த கிராமத்தில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் இன்று ஆயில்யம் நட்சத்திர தினத்தில் மகரிஷி ஸ்ரீஅகத்திய மாமுனிவரின் உதயதினம் மற்றும் உலக சித்தர்கள் தினத்தினை முன்னிட்டு அத்தாளநல்லூர் ஸ்ரீஅகத்தியர்க்கு திருவிழா நடைப்பெற்றது.

நிகழ்ச்சியில் அகாத்தியர் மாமுனிவருக்கு காலை சிறப்பு ஹோமம், பூஜைகள், அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள், மேள தாளங்கள் முழங்க திருவிழா நடைப்பெற்றது. இந்த திருவிழாவில் பக்தர்கள் குடும்பத்துடன் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் மாலை வேளையில் அலங்கரிக்கப்பட்ட அகத்தியர் மாமுனிவர் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சிகொடுத்தார்.

Tags:    

Similar News