நெல்லை-காருகுறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராமத்தினர் முற்றுகை

100 நாள் வேலை வாய்ப்பு அனைவருக்கும் வழங்க வலியுறுத்தி காருகுறிச்சி ஊராட்சி மன்றத்தை ஊர் மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-07-19 10:05 GMT

ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட காருகுறிச்சி கிராமத்தினர்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை அடுத்த காருகுறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தை நேற்று கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

சேரன்மகாதேவி அடுத்த காருகுறிச்சியில், 100 நாள் வேலை திட்டத்தில் சுமார் 800 நபர்கள் அட்டை வைத்துள்ளனர். ஆனால் நாள் ஒன்றுக்கு சுமார் 50 நபர்களுக்கு மட்டுமே வேலை அளிப்பதாக தெரிகிறது. இதனால், அட்டை உள்ள அனைவருக்கும் சீராக வேலை வழங்கக்கோரி காருகுறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஊர் மக்கள் திடீரென திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரகுமார் தலைமையிலான அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில் கன்னடியன் கால்வாயில் தண்ணீர் வந்த காரணத்தினால் சுமார் 7 லட்சம் மதிப்புள்ள வேலை செய்ய முடியாத நிலை உள்ளதாகவும், புதிய வேலையை அமைத்து அதில் சீராக சுழற்சி முறையில் அனைவருக்கும் வேலை அளிப்பதாக அதிகாரிகள் அளித்த உத்தரவாதத்தின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News