பாப்பாகுடியில் இடப்பிரச்சினை தொடர்பாக அவதூறாகபேசி மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
பாப்பாகுடியில் இடப்பிரச்சனை தொடர்பாக அவதூறாக பேசி, மிரட்டல் விடுத்த 2 நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் பாப்பாகுடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடைகால் பகுதியைச் சேர்ந்த முப்பிடாதி(45) என்பவரும், அதே பகுதியை சேர்ந்த மருதய்யா என்பவரும் சகோதரர்கள் ஆவார். இவர்களுக்கு இடையே பூர்வீக சொத்து பிரிப்பதில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. 22.08.2021 அன்று மருதய்யாவின் மகன்கள் முருகேசன் மற்றும் பாலசுப்பிரமணி ஆகிய இருவரும் சேர்ந்து முப்பிடாதி தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது அவரையும் அவரது மனைவியையும் அவதூறாக பேசி, கையால் அடித்து மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து முப்பிடாதி பாப்பாகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் அந்தோணி சவரிமுத்து விசாரணை மேற்கொண்டு முப்பிடாதியையும் அவரது மனைவியையும் அடித்து, மிரட்டல் விடுத்த முருகேசன் மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரையும் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.