நடிகர் விவேக் மறைவுக்கு அஞ்சலி
திருநெல்வேலி கிராம உதயம் அலுவலகத்தில் நடிகர் விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது .;
நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக திருநெல்வேலி மாவட்டம் கோபால சமுத்திரத்தில் உள்ள கிராம உதயம் அலுவலகத்தில் மறைந்த நடிகர் விவேக் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் கிராம உதயம் நிர்வாக இயக்குனர் சுந்தரேசன் கலந்துகொண்டு விவேக் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் புகழேந்தி பகத்சிங் மற்றும் கிராம உதய அலுவலக ஊழியர்கள் கோபாலசமுத்ரம் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.