நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் குறித்த தகவல்களைக் காண்போம்;
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
*நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (12-01-2024)*
பாபநாசம் : பாபநாசம் அணை, தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலியிலிருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ளது. இது திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு முக்கிய அணையாகும். இந்த அணையில் 143 அடிவரை நீரைத் தேக்க இயலும். அணையின் கொள்ளளவு 5,500 மில்லியன் கனஅடி. பாபநாசம் மலையில் ஆங்கிலேயர் காலத்தில் 1942 இல் இந்த அணை கட்டப்பட்டது. இவ்வணையிலிருந்து திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆறு பாய்கிறது. இதன் மூலம் இவ்விரு மாவட்டங்களும் பாசன வசதி பெறுகின்றன. மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் விருதுநகர் ,தென்காசி மாவட்டங்களின் ஆண்டு முழுவதுக்குமான குடிநீர் தேவையை அணை தருகிறது.
அணையின் உச்சநீர்மட்டம் : 143 அடி
அணையின் நீர் இருப்பு : 142.25
அடி
அணையின் நீர் வரத்து : 1606.887 கன அடி
அணையின் வெளியேற்றம் : 2064.562
கன அடி
சேர்வலாறு : சேர்வலாறு அணை 1986 ஆம் ஆண்டு 1225 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட மின் உற்பத்திக்காக அமைக்கப்பட்டது. அணையின் உச்ச நீர்மட்டம் 156 அடியாக உள்ளது.அணையின் அனல்மின்நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மீண்டும் பாபநாசம் அணையில் பாசனத்திற்காக சேமிக்கப்படுகிறது.
அணையின் உச்சநீர்மட்டம் : 156 அடி
அணையின் நீர் இருப்பு : 152.25 அடி
அணையின் நீர்வரத்து : NIL
அணையின் வெளியேற்றம் : NIL
மணிமுத்தாறு : நெல்லை மாவட்டம் களக்காடு மலைப் பகுதியில் செங்காந்தேரி அருகே பச்சையாறின் பிறப்பிடத்திலிருந்து தனியாக பிரிந்து மணிமுத்தாறு அருவியாக மணிமுத்தாறு அணைக்கட்டில் வந்து விழுகிறது. சாதாரண காலங்களில் இந்த நீரின் அளவை தாமிரபரணியுடன் ஒப்பிடும்பொழுது மிகவும் குறைவு என்பதால் இது வெறும் மழைக்கால வெள்ளநீர் வெளியேற்று ஆறாகவே இருந்து வந்தது. எனவே மழைக்காலங்களில் இந்த வெள்ளநீர் தாமிரபரணியில் கலந்து வீணாக கடலில் கலப்பதை தடுக்க காமராசரால் கொண்டு வரப்பட்ட திட்டமே மணிமுத்தாறு அணைக்கட்டுத் திட்டம். இதன் மூலம் சேமிக்கப்படும் நீர் நெல்லை மாவட்டத்தின் வறட்சிப் பகுதிகளான தெற்கு வீரவநல்லூர், கரிசல்பட்டி மற்றும் பச்சையாறு பாசனம் பெறாத நாங்குநேரி தாலுகாவின் வடக்குப் பகுதிகள் வழியாக மிகவும் வறட்சிப் பகுதிகளான திசையன்விளை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு குடிநீராகவும் விவசாயத்திற்கும் பயன்படுகிறது.
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 115.93 அடி
நீர் வரத்து : 1800 கனஅடி
வெளியேற்றம் : 1305 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50
அடி
நீர் இருப்பு: 49.20
அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 22.96 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 33.75 அடி
நீர்வரத்து: 23 கன அடி
வெளியேற்றம்: 40 கன அடி
மழை அளவு :
பாபநாசம் :
1 மி.மீ
மணிமுத்தாறு :
0.80 மி.மீ
கன்னடியான் :
1 மி.மீ
மாஞ்சோலை :
10 மி.மீ
காக்காச்சி :
16 மி.மீ
நாலுமுக்கு :
19 மி.மீ
ஊத்து :
21 மி.மீ
அம்பாசமுத்திரம்:
1 மி.மீ.