சேரன்மகாதேவி தனியார் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்க போட்டி
சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி. வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.
திருநெல்வேலி மாவட்ட சதுரங்க முன்னேற்ற கழகம் சார்பில் மாநில அளவிலான 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பொதுப்பிரிவு மற்றும் மகளிர்களுக்கான சதுரங்க சாம்பியன்ஷிப்-2022 போட்டி சேரன்மகாதேவி ஸ்கேட் பொறியியல் கல்லூரியில் கடந்த 25.03.2022 முதல் 28.03.2022 வரை நான்கு நாட்கள் நடைபெற்றது.
இந்த போட்டியில் 363 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இப்போட்டிக்கு மாநில சதுரங்க இணை செயலாளர் எப்ரேம் தலைமை தாங்கினார். போட்டியை சேரன்மாதேவி பேரூராட்சி தலைவர் தேவி ஐயப்பன், துணை தலைவர் பால்மாரி மற்றும் ஸ்காட் கல்லூரி முதல்வர் சுந்தர் ராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து நான்கு நாட்கள் போட்டி நடைபெற்று பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் கன்னியாகுமரியை சேர்ந்த அஸ்வத் முதல் பரிசும், செங்கல்பட்டைச் சேர்ந்த பிரணவ் இரண்டாவது பரிசையும், மதுரையைச் சேர்ந்த யஷ்வந்த் 3-வது பரிசையும் பெற்றனர். பெண்கள் பிரிவில் சென்னையைச் சேர்ந்த பிரகன்யா முதலிடத்தையும், அனன்யா ராமன் இரண்டாவது இடத்தையும், திண்டுக்கல்லைச் சேர்ந்த சியோனா ஜூடித் மூன்றாவது இடத்தையும் பெற்றார்.
இப்பரிசளிப்பு விழாவில் உதவி வன பாதுகாப்பாளர் ராதை, பத்தமடை பேரூராட்சி தலைவர் ஆபிதா, ஸ்காட் கல்லூரி முதல்வர் சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் அளித்தனர். முதன்மை நடுவராக அதுலன், உதவி நடுவராக சோபன் பாபு ஆகியோர் செயல்பட்டனர். ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் பால்குமார், பொருளாளர் செல்வ மணிகண்டன் , இணை செயளாலர் பாலசுப்ரமணியன் மற்றும் முருகானந்த் ஆகியோர் செய்து இருந்தனர்.