சேரன்மகாதேவி வட்டார விவசாயிகளுக்கு சூடோஸ்டெம் ஊசி விழிப்புணர்வு

சேரன்மகாதேவி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு சூடோஸ்டெம் ஊசி பற்றிய செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

Update: 2022-03-13 06:38 GMT

சேரன்மகாதேவி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு சூடோஸ்டெம் ஊசி பற்றிய செயல் விளக்கம் அளித்த வேளாண் மாணவர்கள்.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டாரத்தில் சு.தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் ஊரக வேளாண் அனுபவ முகாமின் கீழ் விவசாயிகளுக்கு சூடோஸ்டெம் ஊசி குறித்து செயல்விளக்கம் நடத்தினர்.

சூடோஸ்டெம் ஊசியின் மூலம் பூச்சி மருந்தை நேரடியாக வாழைத்தண்டில் செலுத்த முடியும். இதனால் வாழை தண்டை செதப்படுத்தும் பூச்சிகளிடருந்து பயிரைக்காப்பாற்றி அதிக மகசூல் பெறலாம் என்று சு.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் அபிஜித்நாயர், அஜித்குமார், ஆனந்த்பாபு, அரவிந்த், இளங்கோவன், ஹரிசெல்வபிரசாத், முகமது அஸ்லாம், பிரசாந்த், ராஜேஷ், சிவஜெயஆகாஷ், விஸ்வநாத் விளக்கினர்.

மேலும் இதனைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகளை விவசாயிகள் அறிந்து கொண்டனர். பின்னர் அவர்களுக்கு சூடோஸ்டெம் ஊசிக் குறித்த துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

Similar News