நெல்லை: திருட்டு, வழிப்பறி, கொலை முயற்சியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

திருட்டு, வழிப்பறி மற்றும் கொலை முயற்சி முயற்சியில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2021-07-26 17:05 GMT

திருட்டு,வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் .

நெல்லை மாவட்டம், பத்தமடை, காவல் நிலையத்தில் திருட்டு,வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட சேரன்மகாதேவி வட்டம், பத்தமடை, மருதுபாண்டியர் தெருவை சேர்ந்த தாயப்பன் என்பவரின் மகன் பிச்சையா என்ற உள்ளி பிச்சையா (31). திருட்டு,வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கவனத்திற்கு வந்ததது.

அதன் அடிப்படையில்,  பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சேரன்மகாதேவி வட்ட காவல் ஆய்வாளர் சுகாதேவியால்   அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில், குற்றவாளிஉள்ளி பிச்சையாவை  குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, பாளையங்கோட்டை  மத்திய சிறையில் போலீசார்  அடைத்தனர்.

Tags:    

Similar News