பாபநாசம் காரையார் அணையில் 105 அடி நீர் இருப்பு

பாபநாசம், காரையார் அணையில் 105 ஆதி தண்ணீர் இருப்பு உள்ளது.

Update: 2021-04-13 06:16 GMT

காரையார் அணை (ஃபைல் படம்)

பாபநாசம் காரையார் .அணையில் 105 அடி நீர் இருப்பு கடும் கோடையில் 'தண்ணீர் சிக்கனம் தேவை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கடுமையான கோடை வெயில் தாக்கம் அதிகம் இருந்தாலும் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அணைகளில் நீர்இருப்பு கணிசமான அளவு இருந்து வருகிறது. அம்பாசமுத்திரம் தாலுகா மேற்குத் தொடர்ச்சி மலை நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள காரையார்,  சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகள் உள்ளன.

முறையே 143 அடி கொள்ளளவு கொண்ட காரையார் அணையில் தற்போது 105.45 அடி இருப்பு உள்ளது. வெளியேற்றப்படும் நீரின் அளவு 104. 45 கன அடி. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 94.40 அடி நீர் இருப்பு உள்ளது. 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஆனால், அணைக்கு 8 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பொதுவாக நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களின் விவசாய தேவைக்கு திறந்து விடப்படுகிறது. மேலும் நெல்லை தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டம் வரை குடிநீர் தேவைக்கும் இந்த அணைதண்ணீர் பயன்பட்டு  வருகிறது.

தற்போது நிலவி வரும் கடும் கோடை வெயிலில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைக்கு வரும்நீர் வரத்து மிகவும்குறைவாக சள்ளது ஆனால்கடந்த ஆண்டை ஒப்பிடும் பொழுது இந்த ஆண்டு காரை யார் அணை நீர்மட்டம் 105 அடி மிகையாகவே உளளது. இந்த ஆண்டு பிசான சாகுபடிக்கு தண்ணீர் போதிய அளவில் உள்ளது.

மேலும், மூன்று போகம் நெல் பயிர் விளையும் அளவிற்கு பொதுப்பணித் துறையினர் தண்ணீரை சிக்கனமாக பயன் படுத்தும் விதமாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று  விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News