வி.கே.புரம்-இளம்பெண் கணவருடன் சேர்ந்து வைக்கக்கோரி வீட்டின் முன் தர்ணா

வி.கே.புரத்தில் ரம்யா என்பவர் தனது கணவருடன் சேர்ந்து வைக்கக்கோரி வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார் - போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.;

Update: 2021-05-22 18:30 GMT

தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண் ரம்யா

வி.கே.புரத்தில் இளம்பெண் கணவருடன் சேர்ந்து வைக்கக்கோரி வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்த பரமசிவன் எனபவரது மகன் வினிஷ். இவர் அப்பகுதியில் டி.வி. பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவர் அப்பகுதியை சேர்ந்த ரம்யா(வயது 24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. தற்போது 6 வயதில் நிதிஷ் என்ற மகன் உள்ளான்.

இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 3 முறை காவல் நிலையத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் ரம்யா வீட்டைவிட்டு வெளியே சென்று தனது குழந்தையுடன் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ரம்யா இன்று தன்னை தனது கணவனுடன் சேர்த்து வைக்கக்கோரி வினிஷ் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.


வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் ரம்யாவை விக்கிரமசிங்கபுரம் போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News