நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய மாணவன் பலி, உடலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் மாயமானார். உடலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.;
நெல்லை கடையம் அருகேயுள்ள திருமலைப்புரம் பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம் (50) மகன் சரவணன் (வயது 21). பொறியியல் கல்லூரி மாணவரான சரவணன் நேற்று திருமண மறுவீடு நிகழ்ச்சிக்கு தனது குடும்பத்தினருடன் கல்லிடைக்குறிச்சி அருகே சிங்கம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் தந்தை உள்பட குடும்பத்தினருடன் குளிக்க சென்றார்.
அப்போது சரவணன் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
அவரது தந்தை மகனை காப்பாற்ற முயன்றும் பலனின்றி மகன் நீரில் மூழ்கினார். இதுகுறித்து தகவலறிந்த அம்பாசமுத்திரம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் சரவணனை தீவிரமாக தேடி வருகின்றனர்.