நெல்லை மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்த முயன்றவர் கைது - அரிசி மூட்டைகள் பறிமுதல்.
கடத்தல் ரேசன் அரிசி மற்றும் பைக்கை பறிமுதல் செய்த போலீசார், அதனை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.;
நெல்லை மாவட்டம் சிவந்திபுரத்தில் ரேசன் அரிசி கடத்த முயன்றவர் கைது. 30 மூட்டை ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நெல்லை மாவட்டம் சிவந்திபுரம் பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வி.கே.புரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து எஸ். ஐ. சிவதாணு தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிவந்திபுரம் வாணிகர் தெருவில் 30 மூட்டை ரேசன் அரிசி மற்றும் பைக்குடன் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோவில்குளத்தைச் சேர்ந்த துறைகுட்டி மகன் கார்த்திக் (23) என்பதும், இவர் ரேசன் அரிசியை மொத்தமாக வாங்கி கடத்தி செல்ல திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து ரேசன் அரிசி மற்றும் பைக்கை பறிமுதல் செய்த போலீசார், அதனை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ரேசன் அரிசி கடத்தலில் வேறு யாருககாவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து கார்த்திக்கிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.