நெல்லை-தனியார் நிறுவனங்கள் கடன் தொகை வசூலிப்பதை அரசு தடுக்கவேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை

அம்பாசமுத்திரம்- ஊரடங்கு காலத்தில் தனியார் நிறுவனங்கள் கடன் தொகையை வசூலிப்பதை அரசு கட்டுப்படுத்த வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-06-05 08:32 GMT

கடன் தொகை வசூலிப்பதை அரசு தடுக்கவேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை

நெல்லை அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஊரடங்கு காலத்தில் தனியார் நிறுவனங்கள் கடன் தொகையை வசூலிப்பதை அரசு தடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலானோர் விவசாயமே செய்து வருகின்றனர். இவர்கள் விவசாயம், மற்றும் குடும்ப காரணங்களுக்காக தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை மூலமாக கடன் பெற்று வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக இப்பகுதி விவசாயிகள் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் வருமானமின்றி தங்கள் குடும்பங்களையே நடத்த முடியாத நிலையில் உள்ளனர்.

இதற்கிடையில் சில தனியார் நிதி நிறுவனங்கள் இந்த சூழ்நிலையிலும் கடன் தொகையை வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அந்த தனியார் நிதி நிறுவனத்தில் உள்ளவர்கள் தற்போது நீங்கள் பணம் தரவில்லை என்றால் உங்களது ஆதார் எண்ணில் வாராக்கடன் என கூறி வேறு எங்கும் கடன் கொடுக்க விடமாட்டோம், இதற்கு நீங்கள் மேலும் வட்டியும் தரவேண்டும் எனவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் கூறுகையில்:- இந்த தனியார் நிதி நிறுவனத்தினர் எங்களை குடும்பமே நடத்த விடுவதில்லை, இதனால் எங்கள் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை , வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை நாங்கள் அரசிடம் ஒப்படைக்க உள்ளோம் என்று அவர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

தமிழக அரசு இதற்கு ஒரு நல்ல தீர்வு கண்டு குழு கடன்களில் இருந்து மக்கள் விடுதலை பெற அரசு நல்ல உதவி செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

#இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #தகவல் #இன்ஸ்டன்யூஸ் #தமிழ்நாடு #நெல்லை #அம்பாசமுத்திரம் #தனியார் #நிதிநிறுவனங்கள் #கடன் #தொகை #வசூலிப்பதை #அரசு #முறைப்படுத்த #வேண்டும் #goverment #stop #loans #publicdemand #public #demand

Tags:    

Similar News