மாஞ்சோலை விபத்து -காயமடைந்தவர்களை சந்தித்து முன்னாள் சபாநாயகர் ஆறுதல்

மாஞ்சோலையில் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்தவர்களை ஆவுடையப்பன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Update: 2021-05-22 12:49 GMT

முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன்

மாஞ்சோலையில் இருந்து வந்த லாரி விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்குச் சென்று முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் சந்தித்து ஆறுதல்கூறினார்.

மாஞ்சோலையில் இருந்து வந்த லாரி மலைபாதையில் உருண்டு கவிழ்ந்ததில் சம்பவ இந்திலேயே இருவர் பலி,30 பேர் படுகாயமடைந்தனர் .தகவல் தெரிந்தவுடன் 108 வாகனங்கள், ஆப்புலன்ஸ்,தனியார் வாகனம், தீ அனைப்பு மீட்பு பணி வாகனம் மற்றும் காவல்துறை போன்ற அனைத்து வாகனத்திலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அடிப்பட்டவர்களை அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். அதிக காயம் ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு.பாளை அரசு மருத்துவனைக்கு 108 யில் ஏற்றி அனுப்பினர்.

இந்நிலையில் இன்று முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் விபத்தில் பலியான பூதபாண்டியன் மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை அம்பை அரசு மருத்துவமனை வார்டில் நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியுதவி அளிக்க பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News