முக்கூடல் பீடி தொழிலாளர் நல மருத்துவமனை, கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்
நெல்லை மாவட்டம் முக்கூடல் பீடி தொழிலாளர் நல மருத்துவமனை தற்போது கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள முக்கூடல் - பொட்டல்புதூர் ரோட்டில் பீடி தொழிலாளர் நல மருத்துவமனை அமைத்துள்ளது.மத்திய அரசுக்கு சொந்தமான இந்த மருத்துவமனை கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக அங்கு கூடுதலாக படுக்கைகள் மருத்துவ உபகரணங்கள் போன்றவை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில தினங்களில் பீடி தொழிலாளர் நல மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்