நெல்லை கோடிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

கோடிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அகஸ்தியர் லோபா முத்திரை அம்பாள் சிலைகள் முதல்வரின் ஆலோசனைப்படி நிறுவப்படும் அமைச்சர் சேகர் பாபு தகவல்

Update: 2021-07-07 13:08 GMT

நெல்லை கோடிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அகஸ்தியர், லோபா முத்திரைஅம்பாள் சிலைகள் முதல்வரின் ஆலோசனைப்படி மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள முக்கிய கோவில்களை தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று ஆய்வு செய்தார். நெல்லை மாவட்டம் பாபநாசம் மலை கல்யாணி தீர்த்தம் பகுதியில் உள்ள கோடிலிங்கேஸ்வரர் ஆலயத்தை தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அகஸ்தியர் அருவி பகுதியை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கூடிய விரைவில் கோடிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சேதம் அடைந்த அகஸ்தியர் மற்றும் லோபா முத்திரை அம்பாள் ஆகிய சிலைகள் மீண்டும் அதே பகுதியில் அமைக்க தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள முக்கிய கோவில்களை நேரில் ஆய்வு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஆய்வின்போது, நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News