திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் லோக் அதாலத் நடைபெற்றது.
சேரன்மகாதேவி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் லோக் அதாலத் நடைபெற்றது. இதில் 22 சிவில் வழக்குகளும், 370 கிரிமினல் வழக்குகளும் என மொத்தமாக 392 வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டது. சேரன்மகாதேவி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி இளையராஜா (பொறுப்பு) லோக் அதாலத் வழக்குகளை முடித்து வைத்தார்.
இதில் அரசு வழக்கறிஞர் முருகேஸ்வரி, தலைமையிடத்து துணை தாசில்தார் பிரேமா, வழக்கறிஞர்கள் ராமகிருஷ்ணன், சுசீந்திரன், ராஜகோபால், ஆறுமுக பூபதி, சங்கரபாண்டியன், தேவசகாயம், முத்துக்கிருஷ்ணன், ஆயிரதாஸ், தங்கராஜ், மணிகண்டன், சட்டநாதன், பலவேசம், சரவணன், இசக்கிமுத்து, வனிதா மற்றும் அலுவலகப் பணியாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.