நகை கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி 5 கிலோ தங்கம் கொள்ளை
வீரவநல்லூரில் நகைக் கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி 5 கிலோ தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி.மாவட்டம், அம்பா சமுத்திரம் வீரவநல்லுாரில் அலி ஜூவல்லர்ஸ் நகை கடை உரிமையாளர் மைதீன் பிச்சையை அரிவாளால் வெட்டி மைதீன் பிச்சையிடம் 5 கிலோ தங்கம், ரூ.75 ஆயிரத்தை பறித்து தப்பிய கும்பலை போலீசார் தேடுகின்றனர்.
மைதீன் பிச்சை தினமும் இரவு நகைக்கடையை அடைத்த பின் பாதுகாப்பு கருதி நகைகள், பணத்தை மைதீன் பிச்சை வீட்டிற்கு எடுத்துச் செல்வார். நேற்றிரவு 10:00 மணிக்கு மைதீன்பிச்சை நகையை இரண்டு சக்கர வாகனத்தில் எடுத்து சென்றார். அவரது வீடு அருகே சென்றபோது அவரை வழிமறித்த ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி.விட்டு அவரிடம் இருந்து 5 கிலோதங்க நகைகள், ரூ. 70 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பியது. படுகாயமுற்ற மைதீன்பிச்சை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் கொள்ளையர்களை தேடுகின்றனர்.