மாஞ்சோலை எஸ்டேட்டில் மழை: தோட்டத் தொழிலாளர் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாஞ்சோலை எஸ்டேட்டில் பெய்த கனமழையால் நாலு முக்கு பகுதியில் வெள்ளப்பெருக்கு, தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
நெல்லை மாவட்டத்தின் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் பிரபல சுற்றுலாத் தலமான மாஞ்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நாலு முக்கு, காக்காச்சி, கோதையாறு, ஊத்து மற்றும் குதிரை வெட்டி பகுதிகள் உள்ளன.
கடந்த ஒரு வாரமாக இப்பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. நேற்று இப்பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக நாலு முக்கு பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியின் சாலைகள், தேயிலை தோட்டத்தில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஒடியது. இதனால் அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.