சுற்றுச்சூழலைப் பசுமையாக்கும் அம்பாசமுத்திரம் பசுமை தோழர் சுப்புராஜ்

பசுமையான பூமியை பாதுகாக்க மரம் நடுதல், பிளாஸ்டிக் பைகள் இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குதல் எங்கள் நோக்கம் - பசுமை தோழர் சுப்புராஜ்;

Update: 2021-12-22 18:23 GMT

அம்பாசமுத்திரம் பசுமை தோழர் சுப்புராஜ்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்று வட்டாரங்களில் தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வருகிறது பசுமை தோழர்கள் அறக்கட்டளை.

மரவங்கி பராமரிப்பு பணியில்

அம்பாசமுத்திரம் மற்றும் விக்கிரமசிங்கபுரம் பகுதிகளில் உள்ள பள்ளிகள் பேரூந்து நிலையம் சுகாதார நிலையம் .என பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நடுவது மட்டுமல்லாமல் அதனை தொடர்ந்து பாராமரித்தும் வருகின்றார்கள் பசுமை தோழர்கள்.

 பசுமை தோழர்களை பாராட்டிய ஆட்சியர் விஷ்ணு 

வாரம் ஒரு மரக்கன்று என்ற திட்டத்தில் வீட்டுக்கு ஒரு மரம்,பிறந்தநாளன்று ஒரு மரம், என ஒவ்வொரு பகுதியாகவும் தேர்ந்தெடுத்து மரங்களை நட்டி வருகின்றனர்.


இலவச மரவங்கி திட்டம் ஏற்ப்படுத்தி பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை கொடுக்கின்றனர். பசுமை தோழர்கள் நிறுவனர் சுப்புராஜ். இவருடன் குழு செயலாளர் இஸ்மாயீல் மற்றும் குமாரவேல், அறிவானந்தம், வித்யாபதி ,அருள் விஜய், விநாயகம், வெற்றி ,கோகுல், ஆறுமுகராஜ் ஆகியோர் ஆற்றும் சேவை பாராட்டுக்குரியது.


பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் மரம் வளர்க்கும் அவசியத்தை வலியுறுத்துகின்றனர்.


அம்பாசமுத்திரம் பசுமை தோழர்கள் அறக்கட்டளை சார்பில், ஒவ்வொருவரும் பிறந்தநாளன்று மரங்கள் நட வேண்டும் என்பதை வலியுறுத்தி வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதுடன், துண்டு சீட்டுகள் விநியோகம் செய்து மக்களுக்கு மரங்கள் நடுவது பற்றி விழிப்புணர்வை செய்கின்றனர்.


ஒரு நபர் ஒரு மரத்துடன் பயணிக்க வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தி இல்லங்கள் தோறும் மரம் வளர்ப்பதை ஊக்கப்படுத்துகின்றனர்.

தண்ணீர் ஊற்றி முறையாக பராமரிப்பார்கள் என்றால் அவர்களுக்கு எத்தனை மரக்கன்றுகள் கேட்டாலும் இலவசமாக கொடுகின்றனர். பராமரிப்பை உறுதி செய்கின்றனர்.

பிளாஸ்டிக் கவர்களை தவிர்க்க இவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை சிறப்பானது, அதற்காக இவர்கள் கடைகள் தோறும் ஒட்டும் விழிப்புணர்வு வாசகங்கள் படிப்பவரை சிந்திக்க வைக்கும்.



Tags:    

Similar News