கல்லிடைக்குறிச்சியில் இலவச கண் பரிசோதனை முகாம்: 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா மேல்நிலை பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
கோபாலசமுத்திரம் கிராம உதயம் அறக்கட்டளை, நெல்லை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், திலகர் பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் இளையோர் செஞ்சிலுவை படை ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமினை கல்லிடைக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் சுப்பையா துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கண் மருத்துவர் டாக்டர் சமீரா மற்றும் குழுவினர் கலந்து கொண்டார்கள் மேலும் பள்ளி தலைமையாசிரியர் பண்டார சிவன், கிராம உதயம் நிர்வாகி புகழேந்தி பகத்சிங், கிராம உதய ஊழியர் கணேசன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
இந்த முகாமில் 120 பேர்க்கு பரிசோதனை செய்ததில் 20 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.