நெல்லை கோவிந்தபேரியில் 12 அடி ராஜநாக பாம்பை மீட்ட வனத்துறையினர்

கோவிந்தபேரியில் உள்ள விவசாய பண்ணையில் 12 அடி ஆண் ராஜநாக பாம்பை மீட்டு வனத்துறையினர் காட்டுப்பகுதியில் விட்டனர்.

Update: 2021-09-21 16:15 GMT

விவசாய பண்ணையில் 12 அடி ஆண் ராஜநாக பாம்பை மீட்ட வனத்துறையினர்.

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கடையம் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட கோவிந்தபேரியில் சித்தூர் ஹைடெக் பிரைவேட் லிமிடெட் க்கு சொந்தமான விவசாய பண்ணையில் சுமார் 12 அடி நீளமுள்ள ஆண் ராஜநாகம் பாம்பு ஒன்று கிடப்பதாக கடையம் வனத்துறைக்கு தகவல் வந்தது.  இதனைத் தொடர்ந்து அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குனர் செண்பக பிரியா மற்றும் பொறுப்பு வனச்சரக அலுவலர் சரவணகுமார் ஆகியோர் உத்தரவின்படி சிவசைலம் பிரிவு வன அலுவலர் முருகசாமி, கோவிந்தப்பேரி வனக்காவலர் வீரணன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு சென்று ராஜநாகம் பாம்பை பாதுகாப்பாக மீட்டனர். மீட்கப்பட்ட ராஜநாக பாம்பை சிவசைலம் கல்லாறு வனப்பகுதியில் விட்டனர்.

மேலும் இதுபோன்று வன உயிரினங்கள் மீட்புக்கு பொதுமக்கள் கடையம் வனச்சரக அலுவலர் தொலைபேசி எண்  04634 283 165 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு வனத்துறை சார்பில் கேட்டுக் கொண்டனர்.

Tags:    

Similar News