குடிபோதையில் மகனை கொலை செய்த தந்தை கைது: அம்பாசமுத்திரத்தில் பரபரப்பு
அம்பாசமுத்திரத்தில் குடிபோதையில் அண்ணனை கொலை செய்த வழக்கில் ஏற்கனவே தம்பி கைது செய்யப்பட்ட நிலையில் தந்தையும் கைது.;
மதுபோதையில் அண்ணனை கொலை செய்த வழக்கில் ஏற்கனவே தம்பி கைது செய்யப்பட்ட நிலையில் இன்று இறந்தவரின் தந்தை கைது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கன்னி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த வெள்ளதுரை என்பவரின் மகன் வினோத்(26), இவர் கடந்த 20.03.2021 அன்று வீட்டின் மாடிப்படியில் மயக்க நிலையில் கிடந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் 23.03.21 அன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இது குறித்து வினோத்தின் தாயார் சீதாலட்சுமி அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் வினோத், அவரது தந்தை வெள்ளதுரை மற்றும் தம்பி கார்த்திக்(23) ஆகிய மூவரும் 20.03.2021 அன்று வீட்டில் ஒன்றாக சேர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்த போது மது போதையில் ஏற்பட்ட தகராறில் வினோத்தை அவரது தம்பி மற்றும் தந்தை இருவரும் சேர்ந்து அம்மி கல்லை போட்டு கொலை செய்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் சங்கர்கண்ணன் அண்ணனை கொலை செய்த தம்பி கார்த்திக் 24.03.2021 அன்று கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேற்படி இவ்வழக்கில் மற்றொரு குற்றவாளியான கொலை செய்யப்பட்ட வினோத்தின் தந்தை வெள்ளதுரையை இன்று காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணன் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.