சேரன்மகாதேவி மின்வாரிய அலுவலகத்தில் மின் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

மின் ஊழியர்கள் பணி நேரத்தில் பாதுகாப்பாக பணி செய்வது எப்படி, மழை நேரங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கருத்தரங்கில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.;

Update: 2022-04-27 07:13 GMT

சேரன்மகாதேவி மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற மின் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி மின்வாரிய அலுவலகத்தில் மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. சேரன்மாதேவி மின்வாரிய அலுவலக ஊழியர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கு மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மேற்பார்வை மின் பொறியாளர் ராஜராஜன் தலைமை வகித்தார். செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள், உதவி செயற்பொறியாளர்கள் மகேஷ், சுவாமிநாதன், திரிசங்கு, உதவி மின் பொறியாளர் கைலாச மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருத்தரங்கில் மின் ஊழியர்கள் பணி நேரத்தில் பாதுகாப்பாக பணி செய்வது எப்படி, மழை நேரங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பேரிடர் காலங்களில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதில் சேரன்மாதேவி, கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மின் ஊழியர்கள், களப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News