தேர்தல் பாதுகாப்பு : திருநெல்வேலி எஸ்.பி. ஆலோசனை

Election Protection- Police SP meeting

Update: 2021-03-04 07:25 GMT

தேர்தல் பாதுகாப்புக்காக மாவட்ட காவல் அதிகாரிகளுடன், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் அனைத்து உட்கோட்ட உதவி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல் பாதுகாப்பு குறித்து முக்கிய ஆலோசனை வழங்கும்  கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேர்தல் பாதுகாப்பு குறித்து முக்கிய காவல் துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அதில் ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தங்கள் பகுதியில் வெடிபொருட்கள் வைத்துள்ள குடோன்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும், பதற்றமான வாக்குச்சாவடிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும், சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை, கஞ்சா விற்பனை போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் இருப்பவர்களை, நீதிமன்றத்தில் பிடி வாரன்ட் பெற்று அவர்களை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் சேரன்மகாதேவி உதவி காவல் கண்காணிப்பாளர் பிரதீப், ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா, நாங்குநேரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ லிசா ஸ்டெபிலா தெரஸ், அம்பாசமுத்திரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ், வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) உதய சூரியன் மற்றும் தேர்தல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்(பொறுப்பு) ஜெயபால் பர்னபாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News