அம்பாசமுத்திரத்தில் பள்ளி மாணவர்களுக்கு போதை தடுப்பு விழிப்புணர்வு

போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2021-12-08 12:26 GMT

அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போதை பொருட்களின் தீமைகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

போக்சோ சட்டம் குறித்தும், தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் போதைப் பொருட்களின் தீமைகள் குறித்தும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ப.சரவணன் பள்ளி மாணவர்களுக்கு புகையிலைப் பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட காவல் துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தார். இதன்படி அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்னஜோதி மாணவர்களுக்கு போக்சோ சட்டம் குறித்தும், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் போதை பொருட்களின் தீமைகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் மாணவர்களிடம் கலந்துரையாடியும் வாழ்வில் வெற்றி பெற படிப்பின் முக்கியத்துவத்தை அன்பாக எடுத்துக்கூறி அனைவரும் உயர்நிலையை அடைய வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Tags:    

Similar News