காரையாறு கோவிலில் இரண்டாவது நாளாக பூக்குழி இறங்கிய பக்தர்கள்

ஆடி அமாவாசை முன்னிட்டு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் இரண்டாவது நாளாக பக்தர்கள் பூக்குழி இறங்கினர்;

Update: 2024-08-06 07:11 GMT

காரையாறு கோவிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கிய போது எடுத்த படம்

நெல்லை மாவட்டம் அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளது.இன்று ஆண்டுதோறும் ஆடி அமாவாசை மற்றும் பங்குனி உத்திர திருவிழா பிறகு விமர்சியாக நடைபெறும்.

சிங்கம்பட்டி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில் தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து வழிபடுவது வழக்கமாக உள்ளது. இந்த கோவிலில் நேற்று ஆடி அமாவாசை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து திருவிழா நேற்று இரவுடன் முடிவடைந்தது .முன்னதாக 500க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் இரண்டாவது நாளாக பூக்குழி இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதில் 600க்கும் மேற்பட்ட காவல்துறையினர்  பாதுகாப்பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இன்று மாலை 3 மணிக்குள் அனைத்து பக்தர்களும் வனப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் நாளை 7ஆம் தேதி மற்றும் எட்டாம் தேதி ஆகிய தினங்களில் கோவில் பகுதியில் தூய்மைப் பணிகள் நடைபெற உள்ளதால் இரண்டு நாட்கள் பாபநாசம் வன சோதனை சாவடி மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர் .

வனத்துறையினரின் கடும் கெடுபிடிகள் இந்த ஆண்டு பக்தர்களின் வருகை வெகு குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News