மருத்துவ காப்பீடு திட்டத்தில் குறைபாடுகளை நீக்க வேண்டி ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.;

Update: 2021-10-21 14:13 GMT

அம்பை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைப்பாடுகளை நீக்க வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் கட்டணமில்லா சிகிச்சையை உறுதிபடுத்திடவும், மருத்துவமனையில் முன்பணம் கோருவதை தடை செய்திடவும் வேண்டி, காப்பீடு திட்ட குறைப்பாடுகளை களையக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்கம் அம்பை கிளைத் தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை செயல்விளக்கத்தை சங்கத்தின் செயலாளர் ரத்தினவேல் உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தார். கிளைச்செயலாளர் ஜனாத்தனன் நன்றியுரை கூறினார். மேலும் பேரூராட்சி,கால்நடை பராமரிப்பு, பொது சுகாதார அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News