பொதிகை மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அகஸ்தியர் அருவி செல்வதற்கு பணம் வசூலிக்க கூடாது என வலியுறுத்தி பொதிகை மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் மூன்று விலக்குத் திடல் அருகே பொதிகை மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதிகை மலையை காக்க வேண்டும். அகத்தியர் அருவி செல்ல கட்டணம் வருவிக்க கூடாது. சொரிமுத்து அய்யனார் கோவில் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது. என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்Lத்திற்கு முல்லை நில தமிழர் விடுதலைக் கட்சி தலைவர் கரும்புலிகண்ணன் தலைமை தாங்கினார்.
பொதிகை மலை பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் கஜேந்திரன் தேவேந்திரர் சேனா, நிறுவர் ராஜ் பாண்டியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பசும்பொன் ,தங்கவேல், வியனரசு, கண்மணி மாவீரன், முருகேசன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்