அம்பை நகராட்சி நடத்திய கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சி சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
கொரோனா இரண்டாம் அலையிலிருந்து பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க விழிப்புணர்வு பிரசாரம் அம்பையில் பொது மக்கள் கூடக்கூடிய பேரூந்து நிலையம், கடை வீதிகள் என முக்கிய இடங்களில் நெல்லை ஆட்சித் தலைவர் விஷ்ணு உத்திரயின் படியும் அம்பை நகராட்சி ஆணையர் பார்கவி வழிகாட்டுதலின் படியும் அம்பை சுகாதார ஆய்வாளர் பொன் ராஜ்வேல் விழிப்புணர்வை செய்தார்.
அப்போது பொன் வேல்ராஜ் கூறியதாவது
தற்போது அதிகரித்து வரும் கொரோனா இரண்டாம் அலையிலிருந்து பொது மக்கள் தாங்களை பாதுகாத்து கொள்ள அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கூட்டமாக கூடாது, முகக்கவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கபசுர குடிநீர் போன்ற நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பாணங்களை பருகவேண்டும். பேரூந்துகளில் அதிக எண்ணிக்கையில் பயணிப்பதை மற்றும் அத்யாவசிய தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்ள வேண்டும்.
காய்ச்சல், சலி போன்ற கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
வீட்டில் சுகாதாரமாக வைத்து கொண்டு இந்த கொரோனா எனும் கொடிய நோயை விரட்டியடிக்க பொது மக்கள் அரசுடன் ஒத்துழைப்பு தரவேண்டும் என பல விழிப்புணர்வு தகவல்களை அம்பை நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தெரிவித்தார்.