சேரன்மகாதேவியில் பாஜக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

சேரன்மகாதேவியில் பா.ஜ.க செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-03-30 12:16 GMT

சேரன்மகாதேவியில் பா.ஜ.க செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சேரன்மகாதேவியில் பா.ஜ.க செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி கிழக்கு ஒன்றிய பா.ஜ.க செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் ஒன்றிய பொதுச் செயலாளர் ராஜவேலு தலைமை வகித்தார். நிர்வாகிகள் முருகன், கூனியூர் கணேசன், செல்வகனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறுப்பாளர் கட்டளை ஜோதி, கோட்ட அமைப்புச் செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட பார்வையாளர் பாலாஜி ஆகியோர் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

"இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம்" திட்டத்தினை மக்களிடையே கொண்டு சென்று வர இருக்கின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற பாடுபட வேண்டும் என தெரிவித்தனர். இதில் ஓ.பி.சி அணி பிரகாஷ், மகளிரணியினர் உள்பட சுமார் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News