வாகைபதியில் அய்யா வைகுண்டரின் 190வது அவதார தினவிழா

வாகைகுளம் வாகைபதி ஸ்ரீ மன் நாராயண சுவாமி திருக்கோயிலில் அய்யா வைகுண்டரின் 190-வது அவதார தினத்தையொட்டி மாசி ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-03-05 01:00 GMT

வாகைகுளம் வாகைபதி ஸ்ரீ மன் நாராயண சுவாமி திருக்கோயிலில்,  அய்யா வைகுண்டரின் 190-வது அவதார தினத்தையொட்டி நடைபெற்ற ஊர்வலம்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ள வாகைகுளம் வாகைபதி ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயிலில், அய்யா வைகுண்டரின் 190-வது அவதார தினத்தையொட்டி, மாசி மகா ஊர்வலம் அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோவிலில் இருந்து தொடங்கியது. இதற்காக 40க்கும் மேற்பட்ட பகுதியில் உள்ள பதிகளில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பஞ்சமுக அனுமன் காளை, கருடன், நாகம், உள்ளீட்ட பல்வேறு வாகனங்களில் வந்து திருநாமம் கிருஷ்ணன் கோவில் முன்பு சங்கமித்தது.

பின்னர் அங்கிருந்து வாகைகுளம் வாகைபதிக்கு அய்யாவின் அன்பு கொடி மக்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர். ஊர்வலத்தில் அய்யாவின் அன்பு கொடி பக்தர்களும், சிறுவர்களும், பெரியோர்களும், அய்யா நாமத்தை முழங்கியபடியும், ஆண்கள், சிறுமிகள் கும்மி அடித்தும் சென்றனர்.

தொடர்ந்து வாகைகுளம் வாகைபதி குளத்தில் அய்யா புனித நீராடினார். ஊர்வலத்தில் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி அம்பாசமுத்திரம் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News