அம்பாசமுத்திரம் நகராட்சியின் முதல் கூட்டம்: 24 தீர்மானங்கள் நிறைவேற்றம்
அம்பாசமுத்திரம் நகராட்சியின் முதல் கூட்டம் தலைவர், துணைத் தலைவர் உட்பட 21 வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சியின் முதல் கூட்டம், நகராட்சி கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் கே.கே.சி பிரபாகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சிவசுப்பிரமணியன், நகர்மன்ற ஆணையாளர் பார்கவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தலைவர், துணை தலைவர் உட்பட 21 வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்த கூட்டத்தில் குடிநீர், தெருவிளக்குகள் மற்றும் கழிவுநீர் ஒடைகள் குறித்த விவாதங்கள் நடைபெற்றது. மேலும் தலைவர், துணை தலைவர் உறுப்பினர்கள் ஆகியோர் கொண்டு வந்த 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சொத்துவரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை பொதுமக்கள் உடனடியாக செலுத்துவதற்கு மன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென நகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டார். முடிவில் சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கம் நன்றி கூறினார்.